11/05/2015
10/05/2015
காவல் தூதரை நோக்கிச் செபம்
காவல் தூதரை நோக்கிச் செபம் |
இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்
இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம் |
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்க ண்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
- (புனித மார்கரீத்து மரியா)
இயேசு நாதருடைய திரு இதயத்துக்குத தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம் |
இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்பு செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.
இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.
எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.
தேவன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்
தேவன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம் |
என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். - ஆமென்
திரு இதய நவநாள்
திரு இதய நவநாள் |
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்....
(வேண்டிய மன்றாட்டைக் கூறுக)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்தாலன்றி வெறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறேங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச இயேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே; சோதனைக் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். -பர. அருள். பிதா.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிராத்தனைகள் அனுகூலமாகும். திவ்விய இயேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான்தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றி புகழ்ந்து சேவிக்க நான் ஒருகாலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்க முழுவதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். -ஆமென்
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
திரு இருதய மன்றாட்டுமாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
· என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
· பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
· தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத்
· அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
· இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
· அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, -
· இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, -
· நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே,
· எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே,
· இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· இறைத்தன்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே,
· உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, -
· உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே,
· நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
· பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, -
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, -
· எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே,
· நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
· எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே,
· மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, -
· ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, -
· சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
· எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே
· எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
· பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே,
· உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே,
· எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.- இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.
செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்
இயேசுவின் திரு இருதயச் செபமாலை:
கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.
ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.
பத்து மணிக் கருத்துக்கள்:
1. பிற சமயத்தினரால், பிரிவினைச் சகோதரர் அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.
சிரிய மணி: இயேசுவின் மதுரமான திருஇருதயமே - என் சிநேகமாயிரும்.!
பத்து மணி முடிவில்: மரியாவின் மாசற்ற இருதயமே, என் இரட்சணியமாயிரும்
பெரிய மணி : இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்!
ஐம்பது மணி முடிவில்:
இயேசுவின் திரு இதயமே
எல்லாரும் :எங்கள்மேல் இரக்கமாயிரும்.
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே
எல்லாரும் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இயேசுவின் திரு இருதயம்
எல்லாரும்: எங்கும் போற்றப்படுவதாக.
திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே
எல்லாரும் :எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இயேசுவின் திருஇருதயமே ! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும் - ஆமென்.
இயேசுவின் திருப்பெயரின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் திருமகனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
தந்தையின் பேரொளியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
முடிவில்லா ஒளியின் சுடரான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
மகிமையின் மன்னரான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
நீதியின் கதிரவனான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
புனித கன்னிமரியாவின் மைந்தராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
அன்புக்குரிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
வியப்புக்குரிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
வல்லமையுள்ள இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறுதிக்கால தந்தையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பேராலோசனையின் தூதராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஆற்றல் மிகுந்த இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பொறுமை நிறைந்த இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
கீழ்ப்படிதலுள்ள இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
கற்பை விரும்பும் இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
எங்களை அன்பு செய்யும் இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
அமைதியின் இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உயிரின் ஊற்றாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
புண்ணியங்களின் மாதிரியான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
அன்பார்வம் கொண்ட இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
எங்கள் இறைவனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
எங்கள் அடைக்கலமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
வறியவரின் தந்தையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைமக்களுக்குக் கருவூலமான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
நல்லாயனாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உண்மை ஒளியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
முடிவற்ற ஞானமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
அளவற்ற நன்மைத்தனமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
எங்கள் வாழ்வும் வழியுமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
வானத்தூதரின் மகிழ்ச்சியாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
குலமுதுவரின் அரசராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைவாக்கினரின் ஞானமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
அப்போஸ்தலரின் ஆசிரியராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
நற்செய்தியாளரின் போதகராகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
மறைச்சாட்சியருக்குத் திடமாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறையடியார்களின் ஒளிவிளக்காகிய இயேசுவே, - எங்கள்மேல்இரக்கமாயிரும்.
கன்னியரின் தூய்மையாகிய இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
புனிதர் அனைவரின் மணிமுடியான இயேசுவே, - எங்கள்மேல் இரக்கமாயிரும்.
கருணை கூர்ந்து - எங்களை மன்னித்தருளும் இயேசுவே.
கருணை கூர்ந்து - எங்களுக்குச் செவிசாய்த்தருளும் இயேசுவே,-
தீமை அனைத்திலுமிருந்தும் - எங்களை மீட்டருளும் இயேசுவே,
பாவம் அனைத்திலுமிருந்தும்,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது சினத்திலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
பேயின் சூழ்ச்சியிலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
சிற்றின்பப் பற்றுதலினின்று,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
முடிவில்லா அழிவிலிருந்து,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது மனுவுடலேற்பின் மறைபொருளைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது பிறப்பைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது குழந்தைப் பருவத்தைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது தெய்வீக வாழ்வைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது உழைப்பைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
நீர் ஏற்படுத்திய நற்கருணையைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உம்முடைய வேதனைகளையும் பாடுகளையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது சிலுவையையும் கைநெகிழப்பட்ட நிலையையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உம்முடைய துன்ப துயரங்களைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது இறப்பையும் அடக்கத்தையும் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது உயிர்த்தெழுதலைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது விண்ணேற்றத்தைக் கண்ணோக்கி,- எங்களை மீட்டருளும் இயேசுவே,
உமது மகிழ்ச்சியையும் மகிமையையும் கண்ணோக்கி, - எங்களை மீட்டருளும் இயேசுவே,
-இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணைவர்:. - இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் தயவாய் கேட்டருளும்.
செபிப்போமாக.
ஆண்டவரே! நீர் உமது அன்பில் நிலைத்திருக்கச் செய்பவர்களைப் பராமரித்து ஆள ஒரு போதும் தவறுவதில்லை. ஆகவே, உமது திருப்பெயரின் மீது நாங்கள் எப்பொழுதும் பயபக்தியும் அன்பும் கொண்டிருக்கச் செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை.
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
என்றும் வாழும் தந்தையின் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மனிதனாய்ப் பிறந்த இறைவாக்காகிய கிறிஸ்துவின் இரத்தமே
புதிய, முடிவில்லா உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவின் இரத்தமே,- வியர்வையாகத் தரையில் வழிந்தோடிய கிறிஸ்துவின் இரத்தமே
கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டபோது சிந்திய கிறிஸ்துவின் இரத்தமே
முள்முடி சூட்டியபோது வெளியான கிறிஸ்துவின் இரத்தமே,
சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமே
எங்கள் மீட்பின் விலையான கிறிஸ்துவின் இரத்தமே
பாவமன்னிப்புக்கு இன்றியமையாத கிறிஸ்துவின் இரத்தமே
நற்கருணையில் அருந்தப்படுவதும், ஆன்மாக்களைக் கழுவித்துடைப்பதுமான கிறிஸ்துவின் இரத்தமே
இரக்கம் ஆறாகப் பெருகும் கிறிஸ்துவின் இரத்தமே
பிசாசை வென்ற கிறிஸ்துவின் இரத்தமே
மறைச்சாட்சியருக்குத் திடமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
இறையடியார்க்குப் பலமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
கன்னியர்களுக்கு வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
ஆபத்தில் தவிப்போர்க்கு உதவும் கிறிஸ்துவின் இரத்தமே
துன்புறுவோரின் துயர்துடைக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
அழுகையில் ஆறுதல் அளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
மனம் வருந்துவோரின் நம்பிக்கையான கிறிஸ்துவின் இரத்தமே
இறப்போருக்கு மனநிறைவளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
உள்ளங்களுக்கு அமைதியும் இனிமையுமான கிறிஸ்துவின் இரத்தமே
முடிவில்லா வாழ்வின் பிணையான கிறிஸ்துவின் இரத்தமே
உத்தரிக்கிற நிலையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே
மதிப்புக்கெல்லாம் உரிய கிறிஸ்துவின் இரத்தமே
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
- ஆண்டவரே, உமது இரத்தத்தால் எம்மை மீட்டீர்.
துணைவர் - இறைவனுடைய அரசாக எங்களை அமைத்தீர்.
செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக ஏற்படுத்தி, அவரது இரத்தத்தைப் பாவக் கழுவாயாகய ஏற்கத் திருவுளமானீரே. எங்கள் மீட்பின் வலையாகிய அந்தத் திரு இரத்தத்தை வணங்கி தொழுகிறோம். அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து விண்ணக வாழ்வை நாங்கள் பெற்று மகிழ அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
திரு இதய நவநாள்
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்....
(வேண்டிய மன்றாட்டைக் கூறுக)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்தாலன்றி வெறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறேங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச இயேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே; சோதனைக் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். -பர. அருள். பிதா.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிராத்தனைகள் அனுகூலமாகும். திவ்விய இயேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான்தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றி புகழ்ந்து சேவிக்க நான் ஒருகாலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்க முழுவதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேள்ற ஆசையாயிருக்கிறேன். -ஆமென்
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
திரு இருதய மன்றாட்டுமாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி....
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, -எங்களைத் தயைபண்ணி....
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் ....
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி ....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
- இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.
செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்
இயேசுவின் திரு இருதயச் செபமாலை
கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, - என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, - என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, - என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, - என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, - என்னைத் திடப்படுத்தும்.
ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும். பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.
பத்து மணிக் கருத்துக்கள்:
1. பிற சமயத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.
சிரிய மணி: இயேசுவின் மதுரமான திருஇருதயமே - என் சிநேகமாயிரும்.!
பத்து மணி முடிவில்: மரியாவின் மாசற்ற இருதயமே, என் இரட்சணியமாயிரும்
பெரிய மணி : இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்!
ஐம்பது மணி முடிவில்:
இயேசுவின் திரு இதயமே
எல்லாரும் :எங்கள்மேல் இரக்கமாயிரும்.
: சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே
எல்லாரும் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இயேசுவின் திரு இருதயம்
எல்லாரும்: எங்கும் போற்றப்படுவதாக.
திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே
எல்லாரும் :எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இயேசுவின் திருஇருதயமே ! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும் - ஆமென்.
மிகவும் இரக்கமுள்ள தாயே
மிகவும் இரக்கமுள்ள தாயே |
கிருபை தயாபரத்துச் செபம்
கிருபை தயாபரத்துச் செபம் |
கிருபை தயாபரத்திற்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவியமே மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்மக்களை உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்த கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உமது திருவயிற்றின் கனியான இயேசுநாதருடைய பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இடைவிடா சகாய அன்னையின் நவநாள்--Sahaya matha navanal
sahaya matha navanal |
இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)
குரு: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பிக்கைகைகையுமாக இருப்பவள் நீரே!
எல்: இன்று நாங்கள் அனைவரும் ' உம்மிடம் வருகிறோம் ' நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ' இடைவிடா சகாயத் தாயே உம்மை நேசிக்கிறோம் ' எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் ' அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.
குரு: இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.
எல்: சோதனைகளை வெல்லும் பலத்தையும் ' இயேசுக்கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும் ' நல்ல மரணத்தையும் அடைந்து தாரும் ' உம்மோடும் உமது திருக்குமாரனோடும் ' என்றென்றும் வாழ அருள் புரியும்.
குரு : இடைவிடா சகாயத் தாயே!
எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குரு : ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கிணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே ' எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும் எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.
எல் : ஓ! இடைவிடாத சகாயத்தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம் ' வாழ்வோரின் பாதுகாவலும்'
மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே ' உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும் '
மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக'
உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது ' ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே ' நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும் ' நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம் ' நீரே எங்கள் இடைவிடா சகாயத்தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.
குரு : நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.
எல் : ஓ! இடைவிடா சகாயத்தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் ' உம்முன் முழந்தாளிடுகிறோம் ' எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ' துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் ' எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன ' எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும் ' எங்கள் தேவைகளை நிறைவேற்றும் ' எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும் ' ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் ' நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள ' சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத்தாயே இந்த வரங்களையெல்லாம் ' எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல ' ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் ' நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.
விண்ணப்பங்கள்குழுவினர் மன்றாட்டு
குரு : எங்கள் பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத்தலைவர்கள் , சமூகத்தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருளும்.
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்த
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் பரிசுத்த ஆவி அவர்களுக்கு வழிகாட்ட
எல் : எங்கள் தாய் மரியின் மூலம்;, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல்நலத்தில் நீடிக்கவும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தை திரும்ப அடையவும்.
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்.
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு : நமது இடைவிடா சகாயத்தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக்கூறுவோம்.
(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)
(நன்றியறிதல்)
குரு : நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்.
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு : திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு : இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக
எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு : நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத்தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோமாக.
( சிறிது நேரம் மௌன நன்றியறிதல் )
தாயே மாமரி இன்றுன்
சகாயம் தேடினோம் - தாயே மாமரி
உலக மெத்திசையும்
மக்கள் போற்றிடும் புகழ் - அரும்
உம் அற்புத படமுன் வந்து நிற்கும் எங்களை
கடைக்கண் நோக்குவீர் - தாயே மாமரி
வேதாகமத்திலிருந்து வாசகம்
மறையுரை
8 நோயாளிகளை ஆசீர்வதித்தல்
குரு : செபிப்போமாக;
எல் : ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும் ' நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும் ' நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து ' உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக ' எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயராலே, ஆமென்.
குரு : (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்ர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே,
எல் : ஆமென்.
குரு : இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை.
எல் : ஓ! இடைவிடா சகாயத்தாயே ' நீர் அருள் நிறைந்தவள் ' தாராள குணமும் உடையவள் ' இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே ' பாவிகளின் நம்பிக்கை நீரே ' அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும் ' உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு ' நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம் ' நாங்கள் உமது பிள்ளைகள் ' அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும் ' ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் ' நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர் உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால் ' எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம் ' ஓ இடைவிடா சகாயத்தாயே எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும் ' கிறிஸ்துநாதரிடம் அன்பையும் இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும் ' என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும் ' உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.
மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம் (நிற்கவும்)
குரு : எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமைமிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.
எல் : அருள் நிறைந்த மரியே வாழ்க ' கர்த்தர் உம்முடனே ' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ' உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ' ஆசீர்வதிக்கப்பட்டவரே ' அர்ச்சியஸ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக ' இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும், - ஆமென்.
குரு : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
எல் : சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குரு : செபிப்போமாக ஓ! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! உமது தாயாகிய மரியம்மாளை, அவருடைய அற்புதச் சாயலை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவிசெய்ய தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! ஆவருடைய தாய்க்குரிய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது இரட்சண்யத்தின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் சீவித்து ஆட்சி புரியும் சர்வேசுரா.
எல் : ஆமென்.
சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே,
எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே
நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி . . .
எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு . . .
நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி. . .
பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி . . .
தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான ஊணம் கொள்ளும்படி . . .
நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் ..
வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது . . .
என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் . . .
என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும் . . .
என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது . . .
இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது . . .
உம்மை நான் எப்பொழுதும் நேசித்து பூஜித்து சேவித்துப் பிரார்த்திக்கும்படி . . .
ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள்பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம் . . .
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவ கொள்ளை நோயைத் தீர்த்து பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்கு கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.
09/05/2015
இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்
இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம் |
எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்துஎன்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யவும் துணிகிறோம்.
ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.
எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் - ஆமென்.
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்செரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)
பரிபூரண பலனுள்ள செபம்
பரிபூரண பலனுள்ள செபம் |
மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து “என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள்” என்று தேவரீரைப்பற்றி முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின்
வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில். திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு. என்ற புண்ணியங்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில் பதியச் செய்தருள வேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி பிரார்த்திக்கின்றேன் சுவாமி. ஆமென்.
அதிதூதரான மிக்கேல் செபம்
அதிதூதரான புனித மிக்கேலே யுத்தநாளில் எங்களைத் தற்காரும். பசாசின் துஷ்டதனத்திலும் கண் ணிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையு டன் மன்றாடுகின்றோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீரும் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுற்றித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தேவ வல்லமை யைக் கொண்டு நரக பாதாளத்திலே தள்ளிவிடும். ஆமென்.
உத்தம மனஸ்தாப செபம்.
உத்தம மனஸ்தாப செபம். |
என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்திற்கு பாத்திரராய் இருக்கின்ற தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடன் துக்கப்படுகின்றேன். இனிமேல் சுவாமி தேவரிருடைய உதவியினாலே நான் ஒருபோதும் பாவம் செய்யேனென்றும் பாவங்களுக்கு அடுத்த காரணங்களை விட்டுவிடுவேன் என்றும் கெட்டி மனதுடன் வாக்குப்பண்ணுகின்றேன். எங்கள் நாயகன் இயேசுக்கிறிஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத பெறுபேறுகளைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுப்பீர் என நம்புகின்றேன். என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களையெல்லாம் பொறுத்தருளும் சுவாமி ஆமென்.
Subscribe to:
Posts (Atom)