24/04/2015

கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் நவநாள்--=punitha anthoniyar navanal jebam

     கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் நவநாள்;2
        punitha anthoniyar navanal jebam
கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் நவநாள்

     

பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)
குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக

எல்: ஆமென்.

குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

எல்: ஆமென்.

புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம்

எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை:

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை

தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக

பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க....

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே

தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே

தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே

இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே

அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே

மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே

அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே

ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே

ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே

பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே

வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே

மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே

பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே

காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே

இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே

பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே

தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே

புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே

உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே

சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே

எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே

நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே

நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே

புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே

திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே

சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:

ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வாரும். விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள் ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.

பேய் ஓட்டுகிறதற்கு செபம்:

இதோ ஆண்டவருடைய சிலுவை; சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார். அல்லேலூயா!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

104 comments:

  1. Replies
    1. St. Antony please pray for us 🙏

      Delete
    2. St. Antony f Dornahalli pray for us

      Delete
    3. St. Antony of Dornahalli. Pray for us. Amen

      Delete
    4. Amen amen amen amen amen amen amen 🙏

      Delete
    5. Amen amen amen amen amen amen amen amen🙏

      Delete
    6. Amen amen amen amen amen amen amen amen amen🙏

      Delete
    7. Amen amen amen amen amen amen amen amen amen amen🙏

      Delete
    8. Amen amen amen amen amen amen amen amen amen amen amen🙏

      Delete
    9. Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

      Delete
  2. Amen St Antony pray for us praise the Lord

    ReplyDelete
  3. Punitha antoniyare enakaga vendi kollungal amen

    ReplyDelete
  4. amen....punitha anthoniyare enagalukaga vendikollum....amen

    ReplyDelete
  5. Anthoniyare yenala thanga mudila yena kapathunga 😭😭😭 yen manakulapatha thethu vainga 😭😭😭

    ReplyDelete
    Replies
    1. He will give solution be confident

      Delete
  6. St. Antony f Dornahalli pray for us

    ReplyDelete
  7. St. Antony of Dornahalli pray for my grandson for his good health and in his all ways.

    ReplyDelete
  8. St. Antony of Dornahali pray for us.

    ReplyDelete
  9. St Antony of Dornahalli pray for my granchildren n their studies

    ReplyDelete
  10. St Antony of Dornahalli pray for all our families.

    ReplyDelete
  11. St. Antony of Dornahalli pray for us. My grandchildren n all my family members.

    ReplyDelete
  12. ST. ANTONY OF DORNAHALLI, PRAY FOR US AND OUR FAMILIES.

    ReplyDelete
  13. ST. ANTONY OF DORNAHALLI PRAY FOR US

    ReplyDelete
  14. St. Antony of Dornahalli pray for all our family members.

    ReplyDelete
  15. ST. ANTONY OF DORNAHALI PRAY FOR US N FOR ALL OUR FAMILY MEMBERS.

    ReplyDelete
  16. ST. ANTONY OF DORNAHALLI PRAY FOR OUR FAMILIES

    ReplyDelete
  17. St. Antony of Dornahalli. Jordan shld b polite in behaviours.

    ReplyDelete
  18. St. Antony of Dornahalli. Amen pray for our family.

    ReplyDelete
  19. St. Antony's of Dornahalli pray for us all and our family members to our Infant Jesus whom you have in your hands.

    ReplyDelete
  20. St.Antony of Dornahalli pray for Anto n his fmly.

    ReplyDelete
  21. St.Antony of Dornahalli pray for all our family members to the child Jesus in your hand.

    ReplyDelete
  22. St Antony please pray for me and my family

    ReplyDelete
  23. Amen Thank you st. Antony Allaluia

    ReplyDelete
  24. Amen praise the lord

    ReplyDelete
  25. St Anthony's pray for us

    ReplyDelete
  26. Angaluku help panuga appa naga iruka Edam irunthu ila marthi tha naga irukom pls God neega Ilana naga ila enga Edam engaluku kidaikanum theruvum kidaikanum anthonyara engaluku neega vanthu help panugaaaa anaku marriage nalla padiya unga asivathathodu nalla padiya nadakanumm anthoniyarae

    ReplyDelete
  27. Anthoniyar appa ennudaiya venduthalaiyei kettarulum, umathu பதத்தில் ஒப்படைக்கிறேன். Amen

    ReplyDelete
  28. Intha pirachanail irunthu veliya varanum, vandi, panam kamiya ketkanum.. Please appa😭🙏help pannunga. Ungala நம்பி than irukan pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pirachanai innaiyoda finished aaganum....... Amen

    ReplyDelete
  29. Kodi arputharana punitha anthoniyare, enkalukaga vendikollum... Amen!!!! Hearty thank you for this blessed Life!!!

    ReplyDelete
  30. Anthonyare enathu iru kulanthaikalukku ulla udal nalakkuraivai sari seithu tharungal en kulanthaikal intha nojal avathip padukiraarkal ummai Kenji manradukirom engalai ippinijilitunthu meeddedum udal nalam pooranamaaka varamarulum amen

    ReplyDelete
  31. Miracle man anthoniyar

    ReplyDelete
  32. ஆமென்

    ReplyDelete
  33. St.Antony pray for our family.

    ReplyDelete
  34. St.Antony hear our prayers.

    ReplyDelete
  35. St Antony answer our prayers.Thank you.

    ReplyDelete
  36. St.Antony pray for our family.Thank you.Amen.

    ReplyDelete
  37. St.Antony pray for our family.Amen.

    ReplyDelete
  38. Dear St.Anthony please bless my family with good health, logivity, and financial well being. We are suffering. Intercede to Infant Jesus on our behalf and grant our prayer requests. I am an orphan and You are my foster father. Please fulfil mine and my family's prayers. Amen.

    ReplyDelete
  39. Paduvai punitha Anthony pray for us.

    ReplyDelete
  40. Padua Punitha Anthony Pray for us.

    ReplyDelete
  41. Padua Punitha Anthony Pray for us.Amen.

    ReplyDelete
  42. புனித அந்தோணியரே என் பிள்ளைகளுக்ககா வோன்டிக்கொள்ளும்

    ReplyDelete
  43. St. Antony pray for us.

    ReplyDelete
  44. St. Antony pray for us.... Please

    ReplyDelete
  45. Punidha anthoniyaare oru maadhamaga indha vaai pun naakil pun karanamaga biopsy varai seithum valiyaal avasthai paduginren.. Enakaga aandavaridam mandraadi naakil ulla pun gunamaaki thandhrulume... Enudaya kidney endha baadhippum illamal Semaya function aaga arul puriyume Swamy... Enakaga indha vinnaappangalai en Aandavaridam parindhu pesi niraivetri thandharulumaaru thazhmaiyodu mandraadi ketukolgindren.... Amen

    ReplyDelete
  46. Nambungal jebiyungal nalladhu nadakkum nalladhu nadakkum 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  47. Beloved St.Anthony shower your blessings for my successful cervical stich procedure and recovery and healing. Bless me for normal delivery at right time. Bless me, my child in womb, my daughter and my husband with good health, longevity, prosperity and blessings of Mother Mary and Jesus. Amen.

    ReplyDelete
  48. Punidha anthonyare yengalukkaka vendikollum Amen 🙏🕯️🕯️🕯️🙏🌹🌹🌹

    ReplyDelete