உத்தம மனஸ்தாப செபம். |
என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்திற்கு பாத்திரராய் இருக்கின்ற தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடன் துக்கப்படுகின்றேன். இனிமேல் சுவாமி தேவரிருடைய உதவியினாலே நான் ஒருபோதும் பாவம் செய்யேனென்றும் பாவங்களுக்கு அடுத்த காரணங்களை விட்டுவிடுவேன் என்றும் கெட்டி மனதுடன் வாக்குப்பண்ணுகின்றேன். எங்கள் நாயகன் இயேசுக்கிறிஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத பெறுபேறுகளைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுப்பீர் என நம்புகின்றேன். என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களையெல்லாம் பொறுத்தருளும் சுவாமி ஆமென்.
No comments:
Post a Comment