09/05/2015

பரிபூரண பலனுள்ள செபம்

பரிபூரண பலனுள்ள செபம்

மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து “என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள்” என்று தேவரீரைப்பற்றி முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின்


வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில். திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு. என்ற புண்ணியங்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில் பதியச் செய்தருள வேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி பிரார்த்திக்கின்றேன் சுவாமி. ஆமென்.

அதிதூதரான மிக்கேல் செபம்

அதிதூதரான புனித மிக்கேலே யுத்தநாளில் எங்களைத் தற்காரும். பசாசின் துஷ்டதனத்திலும் கண் ணிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையு டன் மன்றாடுகின்றோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீரும் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுற்றித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தேவ வல்லமை யைக் கொண்டு நரக பாதாளத்திலே தள்ளிவிடும். ஆமென்.

No comments:

Post a Comment