கிருபை தயாபரத்துச் செபம் |
கிருபை தயாபரத்திற்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவியமே மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்மக்களை உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்த கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உமது திருவயிற்றின் கனியான இயேசுநாதருடைய பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
No comments:
Post a Comment