காலைச்செபம் |
என்னை அன்பு செய்யும் வானகத்தந்தையே! உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத் தந்துள்ளீர். இன்று நான் சந்திக்கப்போகும் எல்லா மனிதர்களையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி நடக்கட்டும். இன்று நீர் எனக்கு தரப்போகும் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன். அன்பான இயேசுவே உம்மைப்போன்று நானும் வானகத்தந்தையின் விருப்பப்படி வாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று நீர் என்னுள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தூண்டிவிடும் போது அவற்றை நான் விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும்.
ஆமென்.
No comments:
Post a Comment