|
மாலைச்செபம் |
என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே! இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன். நான் உம்மை நினையாத போது நீர் என்னை நினைத்தீர் இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன். என்னுடைய அம்மாவிற்காக நன்றி கூறுகின்றேன் என்னுடைய அப்பாவிற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய சகோதரர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய நண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும் போது என்னோடு இரும். எனக்கு நல்ல ஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும். என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே! இந்த நாள் முழுவதும் நீர் எனக்குத் தந்த நல்ல சிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன். இந்த இரவு முழுவதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில் என்னை உம்நினைவால் எழுப்பிவிடும் ஆமென்.
ஓ என் இயேசுவே
ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பில் நின்று இரட்சித்தருளும். சகல ஆன்மாக்களையும் பரலோக பாதையில் வழிநடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாக வேண்டியவர்களுக்கு விசேஷ உதவி செய்தருளும்.
Amen
ReplyDelete