09/04/2015

மூவேளைச்செபம்

மூவேளைச்செபம்


ஆண்டவருடைய தூதர் மரியாவுக்கு தூதுரைத்தார்.

அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள் (அருள் நிறைந்த மரியே)

இதோ ஆண்டவருடைய அடிமை

உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் (அருள் நிறைந்த மரியே)

வார்த்தை மனுவுருவானார்

எங்களிடையே குடிகொண்டார். (அருள் நிறைந்த மரியே)

இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியாக.

இறைவனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

சருவேசுரா சுவாமி! உமது திருக்குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதன் ஆனதைத் திருத்தூதர் சொன்னதினாலே அதை அறிந்திருக்கின்ற நாங்கள் அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மகிமையைஅடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். இந்த மன்றாட்டை அதே இயேசுக்கிறிஸ்து நாதர் மூலமாக ஏற்றுத்தந்தருளும் ஆமென்.

பாஸ்கா காலத்தில் மூவேளைச்செபம்.


விண்ணக அரசியே மனம் களிகூரும் - அல்லேலூயா!

ஏனெனில் இறைவனை கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா

கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா

ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். . அல்லேலூயா

செபிப்போமாக

 இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூரத் திருவுளமானீரே அவருடைய திருத்தாயாகிய புனித கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றும் நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள் புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

No comments:

Post a Comment