09/04/2015

Jebam --=பரிசுத்த ஆவியானவருக்குச் செபம்

பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். உமது விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பி உமது நேசத்தின் அக்கினியை அவர்களிடத்தில் பற்றியெரியச் செய்தருளும். ஆண்டவரே உமது பரிசுத்த ஆவியை எங்களிடத்தில் அனுப்பியருளும் அப்போது எங்கள் இருதயங்கள் புதுப்பிக்கப்படும்.

செபிப்போமாக.

பரிசுத்த ஆவியின் பிரகாசத்தினால் விசுவாசிகளின் இருதயங்களை புதுப்பித்தருளின சருவேசுரா. நாங்களும் அதே பரிசுத்த ஆவியின் வரத்தினால் நல்லவைகளை விரும்பவும் அவருடையஆறுதலை எப்போதும் பெற்று அக்களிக்கவும் பண்ணியருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து மூலமாக பெற்றுத் தந்தருளும் ஆமென்.

No comments:

Post a Comment