10/04/2015

சமாதானத்திற்காக செபம்.


சமாதானத்திற்காக செபம்.

ஆண்டவரே! என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும். வெறுப்புள்ள இடத்தில் அன்பையும் மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும். ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும். அவநம்பிக்கை

உள்ள இடத்தில் நம்பிக்கையையும் இருள் உள்ள இடத்தில் ஒளியையும். துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும் நான் விதைத்திட அருள் தாரும். நான் ஆறுதல் தேடுவதை விட ஆறுதல் அளிக்கவும் பிறரால் புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும். அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும். ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிப்பதன் மூலம்தான் மன்னிப்படைய முடியும். மடிவதன் மூலம்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் பிறக்க முடியும். ஆமென்.

No comments:

Post a Comment